அவுஸ்திரேலியாவில் கொவிட்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில் தடுப்பூசி குறித்து மக்கள் அலட்சியமாக இருக்ககூடாது என அவுஸதிரேலிய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஆறுமாதங்களில் 16. 5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவில்லை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவசபை இது கரிசனையளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கவலையளிக்கும் ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் ரொபின்சன் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மார்ச்சில் காணப்பட்டதை விட இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடக்கல்கள்கட்டுப்பாடுகளின்காலம் முடிவிற்கு வந்துவிட்டது இதன்காரணமாகவே மக்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்ற மனோநிலைக்குள் சிக்குப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரொபின்சன் ஆனால் புதிய தரவுகள் வைரஸ் நாளாந்தம் அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானவர்களை தாக்குவதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது அலட்சியமாகயிருப்பதற்கான தருணம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் பூஸ்டர்களை செலுத்திக்கொள்ளவேண்டு;ம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM