பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அரபாத் சன்னி பங்களாதேஷ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காதலியின் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டதால் அரபாத் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரபாத் சன்னி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராகவுள்ளார்.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு அரபாத் சன்னி மீது அவரது காதலி பொலிஸில் ஒரு முறைப்பாடொன்றை தெரிவித்திருந்தார்.

அதில் அரபாத் முகநூலில் தன்னுடைய பெயரில் போலிக் கணக்கை திறந்து அதில் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அரபாத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

அரபாத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை அல்லது 1,26,000 டொலர் அபராதம் விதிக்ப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.