கனடாவின் காட்டுதீயினால் அமெரிக்காவின் கிழக்கு பகுதி பழுப்பு நிறமாக மாறியது

Published By: Rajeeban

08 Jun, 2023 | 12:36 PM
image

கனடாவில் மூண்டுள்ள காட்டுதீயினால் உருவாகியுள்ள புகைமண்டலம் தென்பகுதி நோக்கி நகர்வதால் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களிற்கு மாசடைந்த வளி குறித்து எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் காட்டுத்தீயின் புகைதெற்காக நகர்ந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களில் வானத்தை இருண்ட பழுப்பு நிறமாக மாற்றியுள்ளது.வளி மாசடைந்ததாக மாறியுள்ளது.

நியூயோர்க் உட்பட அமெரிக்காவின் கிழக்கு பகுதி நகரங்கள் மாசடைந்த வளி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

பொதுமக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

நியூயோர்க்கில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. நியூயோர்க்கில் பொதுமக்கள் வெளியே செல்வதை முடிந்தளவில் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது,பாடசாலைகள் பொதுநிகழ்வுகளை இரத்துச்செய்துள்ளன.

மேமாதம் முதல் கனடாவின் காட்டுதீயினால் ஏற்பட்ட புகைமண்டலம்  அமெரிக்காவை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் மேல்மாகாணம் முதல் கிழக்கு வரை சுமார் 150 காட்டுதீக்கள் காணப்படுகின்றன.

நியூயோர்க்கில் செவ்வாய்கிழமை புகைமண்டலத்தின் வாசனையை உணரமுடிந்தது,செவ்வாய் மாலைவானம் பழுப்பு நிறத்தில் மாறியது சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பார்க்ககூடிய நிலை குறைவடைந்தது,

புதன்கிழமையும் புகைமண்டலத்தின் வாசனை தொடர்ந்ததால் வளியின் தரம் குறித்த எச்சரிக்கை நியூயோர்க்கில் தொடரக்கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13