நுவரெலியாவிலிருந்து - நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா - தலவாக்கலை ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து நுவரெலியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த வேன் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி நேற்றிரவு புதன்கிழமை 11 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது குறித்த வேனில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவர் மாத்திரம் காயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வேன் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேன் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM