ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட நட்சத்திரமான லயனல் மெஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் தான் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெய்னின் பார்சிலோனா கழகத்துக்காக நீண்டகாலமாக விளையாடி வந்த மெஸி, 2021 ஆம் ஆண்டு பிரான்ஸின் பரீஸ் செயின்ட் ஜேர்மைன் கழகத்தில் இணைந்தார்.
அக்கழகத்தில் அவரின் ஒப்பந்த காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அவர் மீண்டும் பார்சிலோனாவில் இணைந்துகொள்ளவார் அல்லது சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தில் இணைந்துகொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.
எனினும், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள செவ்வியொன்றில், 'மியாமிக்கு செல்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன். ஒப்பந்தம் இன்னும் 100 சதவீதம் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆனால், எமது பாதையில் தொடர்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்' என மெஸி கூறியுள்ளார்.
கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக்கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணிக்குத் தலைமை தாங்கிய லயனல் மெஸி, 7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புளோரிமா மாநிலத்தை தளமாகக் கொண்ட இன்டர்மியாமி கழகமானது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காமுக்கு சொந்தமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM