சம்பளம் குறித்த பிரச்சினையை முன்வைத்து ரயில் சாரதிகள் நடாத்த இருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் குறித்த பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அடுத்து, இந்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Image result for train virakesari

லோகோமோடிவ் ஒபரேடர் இன்ஜினியர் எனப்படும் ரயில் சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்க  திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அமைச்சர் இந்த பிரச்சினை தொடர்பில் பேச தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

பிரதான ரயில் சங்கமான ரயில் சாரதிகள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்படும் நிலை ஏற்பாட்டிருக்கமென தெரிவிக்கப்படுகிறது.