கைத்தொழிலாளர்களின் கடன் தவணைகளை செலுத்த சட்ட ரீதியில் நிவாரண காலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் - ஹக்கீம்

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் மூலம் நாடு பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை அந்த காலத்தில் வழங்காமல் இருப்பதற்கு நிவாரண காலம் கிடைக்கப்பெற்றது போல் கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன் தவணைகளை வங்கிகளுக்கு வழங்க நிவாரண காலம் ஒன்றை சட்ட ரீதியில் அமைத்துக்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்டைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டின் பொருளாதாரம் கொவிட் தொற்று, ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து பாரிய நெருக்கடிக்கு ஆளாகி வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

 குறிப்பாக வங்கி கடன் தொடர்பாக, கடன் மீள செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் தொடர்பாகவும் வங்கிகள் அந்த கடனை மீள பெற்றுக்கொள்ள எடுக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமையால் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் மூலம் நாட்டுக்கும் சில நிவாரணம் கிடைத்தது.

ஏனெனில் நாடு பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை அந்த காலத்தில் வழங்காமல் இருப்பதற்கு நிவாரண காலம் கிடைக்கப்பெற்றதால், அந்த காலத்தில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததிருக்கிறது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதற்காக வங்கிகளுக்கு வழங்கவேண்டிய கடன் தவணையை தொழிற்ச்சாலைகள் சிறுது காலத்தில் வழங்க முடியுமான வகையில் நாங்கள் சட்ட ரீதியில் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் குண்டசாலை தொகுதியில் பாரம்பரி கைத்தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் நாடுபூராகவும் இவவாறான கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் நிலை இன்று மிகவும் கவலைக்குரிய நிலையே காணப்படுகிறது.

இவர்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்துவந்த லக்சல போன்ற நிறுவனங்கள் தற்போது அதனை நிறுத்தியுள்ளதால், இடைத்தரகர்கள் சிலர் தங்களின் நன்மைக்காக இதனை திருப்பிக்கொண்டிருக்கிறனர்.

 அதேநேரம் தங்களிடம் பல வருடங்களாக பெற்றுக்கொண்ட உற்பத்தி பொருட்களுக்கான பணத்தை லக்சல நிறுவனம் இதுவரை வழங்காமல் இருப்பதாகவும்  கைத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பல்வேறு கைத்தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-07-15 06:35:23
news-image

வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது பிறிதொரு...

2024-07-14 21:25:06
news-image

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச்...

2024-07-14 21:19:43
news-image

திருகோணமலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்...

2024-07-14 21:24:24
news-image

கிளிநொச்சியில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் !

2024-07-14 21:25:27
news-image

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்...

2024-07-14 21:27:47
news-image

வட்டுக்கோட்டையில் பத்து போத்தல் கசிப்புடன் பெண்...

2024-07-14 17:46:06
news-image

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர்...

2024-07-14 17:17:42
news-image

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை...

2024-07-14 17:24:08
news-image

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள்...

2024-07-14 17:28:57
news-image

எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

2024-07-14 17:53:32
news-image

1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி...

2024-07-14 16:29:28