(நெவில் அன்தனி)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை பிரிவு பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் அண்மையில் நடத்திய விதுதய ரிட்ஸ்பறி நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரியும் பெண்கள் பிரிவில் ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் கழகமும் ஒட்டுமொத்த சம்பியனாகின.
ஆண்கள் பிரிவில் புனித செபஸ்தியார் கல்லூரி 415 புள்ளிகளைப் பெற்று 78 புள்ளிகள் வித்தியாசத்தில் ஒட்டுமொத்த சம்பியனானது.
ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் கழகம் 337 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் எக்சலரேட் நீச்சல் பயிற்சியகம் 259 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில் ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் கழகம் 329 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
நுகேகொடை அநுலா வித்தியாலயம் 259 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது. புளூவேவ் நீச்சல் பயிற்சியகம் 249 புள்ளிளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றது.
ஒட்டுமொத்த சம்பியனான புனித செபஸ்தியார் கல்லூரியும் ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் கழகமும் சிரேஷ்ட பிரிவிலும் சம்பியனாகின.
சிரேஷ்ட ஆண்கள் பிரிவில் புனித செபஸ்தியார் கல்லூரி 303 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது. ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் (158 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் ஸாஹிரா கல்லூரி (151 புள்ளிகள்) 3ஆம் இடத்தையும் பெற்றன.
சிரேஷ்ட பெண்கள் பிரிவில் ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் கழகம் 280 புள்ளிகளுடன் சம்பியனானது. நுகேகொடை அநுலா வித்தியாலயம் (189 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் புளூவேவ் நீச்சல் பயிற்சியகம் (77 புள்ளிகள்) 3ஆம் இடத்தையும் பெற்றன.
கனிஷ்ட ஆண்கள் பிரிவில் அக்சலரேட் நீச்சல் அக்கடமி (207 புள்ளிகள்) சம்பயினானதுடன் ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ் (179 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் தேர்ஸ்டன் கல்லூரி (132 புள்ளிகள்) 3ஆம் இடத்தையும் பெற்றன.
கனிஷ்ட பெண்கள் பிரிவில் ப்ளூவேவ் நீச்சல் பயிற்சியகம் (172 புள்ளிகள்) சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் கில்லர் வேல் அக்வாட்டிக்ஸ் (145 புள்ளிகள்) 2ஆம் இடத்தையும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் (110 புள்ளிகள்) 3ஆம் இடத்தையும் பெற்றன.
தனிநபர் சம்பியன்கள்
10 வயதின்கீழ்
சிறுமிகள்: சனுமி நெஹன்சா (பாணந்துறை லைசியம்) 38 புள்ளிகள்
சிறுவர்கள்: பி. டி, சில்வா (பட்டர்ப்ளை நீச்சல் பயிற்சியகம்) 34 புள்ளிகள்
12 வயதின்கீழ்:
சிறுமிகள்: ஜித்யா மெத்தானந்த (புளூவேவ் நீச்சல் பயிற்சியகம்) 40 புள்ளிகள்
சிறுவர்கள்: சானுக வீரரத்ன (புளூவேவ் நீச்சல் பயிற்சியகம் (40 புள்ளிகள்)
14 வயதின்கீழ்:
சிறுமிகள்: ஹேஷரா டி சில்வா (இரத்தினபுரி லைசியம்) 39 புள்ளிகள்
சிறுவர்கள்: ஏ.ஐ.எம். ஹாதிம் (ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ்) 50 புள்ளிகள்
16 வயதின்கீழ்:
சிறுமிகள்: நெத்தாலி அவுட்ஸ்கூன் (ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ்) 58 புள்ளிகள்
சிறுவர்கள்: எம். எவ். முஹம்மத் (ஸாஹிரா கல்லூரி) 60 புள்ளிகள்
18 வயதின்கீழ்:
பெண்கள்: ஆர். என். பீ. மலீஷா (லீட்ஸ் அக்வாட்டிக் க்ளப்) 58 புள்ளிகள்
ஆண்கள் : இயன் ஜேக் (ட்ரைட்டன் அக்வாட்டிக்ஸ்) 66 புள்ளிகள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM