சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தேசிய உற்பத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கடசித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்டைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ,இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் பட்சத்தில், நாட்டில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான உதாரணங்களைக் காண முடியும். 

பொருளாதார நெருக்கடி, ,அதிக வட்டி விகிதங்கள்,லீஸிங் மாபியா,மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி,அரசின் வரிக் கொள்கை போன்றவற்றால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகளை வழங்க முடிந்தால் உலக உற்பத்தியில் முதலிடத்தில் எமது நாட்டை ஸ்தானப்படுத்த முடியும்.

மேலும் நாட்டின் தொழிலாளர்களில் 45வீதமானவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களாகும். அதேபோன்று ஏற்றுமதி அபிலிருத்தி சபையின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு 52வீத பங்களிப்பை வழங்குவது சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளாகும். 

கிராமிய அவிருத்திக்கு பெரும் சக்தியாக இருப்பதுடன் உள்நாட்டு தொழிற்சாலை வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

அத்துடன் உலகின் பல நாடுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்தியிருக்கின்றன. எமது நாட்டில் அத்தகைய கவனம் செலுத்தப்படவில்லை என்பது துர்ப்பாக்கிய நிலை.

நாட்டின் பொருளாதாரத்தின் எஞ்ஜின் என்று அழைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில்துறையினர் மீது அரசாங்கம் இப்போதாவது கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15