(ஏ.என்.ஐ)
'நயா ஜே - கே', புதிய காஷ்மீர் என்று சொல்லப்படும் 'நயா ஜம்மு - காஷ்மீர்', பயங்கரவாதத்தை தோற்கடித்து, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வளர்ச்சியடையாத பகுதி என்ற நிலையிலிருந்து, இந்தியா நாட்டின் மிகவும் துடிப்பான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை இரத்து செய்த பிறகு, அரசாங்கம் பல சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மக்களின் சமூக, பொருளாதார வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை திறக்க இளைஞர்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டில், 82,000க்கும் மேற்பட்ட வணிக அலகுகள் ஜம்மு - காஷ்மீரில் நிறுவப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் சுமார் 2.85 இலட்சம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
'மிஷன் யூத்' திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சுயசார்புடையவர்களாக மாறுவதற்கு அரசாங்கம் கைகொடுத்துள்ளது.
கடந்த 10 - 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 15 ஆயிரம் அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு வரை தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகளில் மோசமாக மதிப்பிடப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் கோடை மற்றும் குளிர்கால தலைநகரங்களான ஸ்ரீநகர், ஜம்மு ஆகியவை நவீன நகரங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு முதல் ஜம்மு - காஷ்மீர் விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தை கண்டு வந்த இப்பிராந்தியம் தற்போது இளம் தொழில்முனைவோரின் நிலையான வளர்ச்சியை கண்டுவருவதால், 'நயா ஜே - கே' என்கிற நயா ஜம்மு காஷ்மீரை உருவாக்கும் சிற்பிகளாக அப்பகுதி இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்கள் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
ஸ்ரீநகரில் 3 நாள் ஜி-20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது ஜம்மு காஷ்மீருக்கு புதிய வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இரண்டும் பாரம்பரியம் மிக்க இடங்கள் ஆகும். இந்த நகரங்களை மேம்படுத்துவதில் முன்னாள் ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை.
கடந்த காலங்களில் இந்த இரண்டு நகரங்களும் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பது கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற பணிகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM