காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியிலும் காரிருளில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றிரவு முழுவதும் மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் எவரும் நேரில் சென்று பார்வையிடவில்லை.

காணாமல் போனவர்களின் உறவினர்கள், நீராகாரம் எதுவுமின்றி தமக்கு நீதி வேண்டி சாகும் வரை உண்ணாவிரதத்தில் நேற்று(23) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளனர்.

 நேற்று இரவு போராட்டக்காரார்கள் அமர்ந்திருந்த கொட்டகை கடும் இருள் சூழ்ந்ததாகவே காணப்பட்டது. 

எனினும் அவ்விடத்திற்கு சமூக ஆர்வலர்களோ, பொது மக்களோ, அரசியல் பிரமுகர்களோ ஆதரவு தராதது உளவியல் ரீதியாக அவர்களை சோர்வடைய செய்துள்ளது.

 அவர்கள் அமர்ந்திருக்கும் மண்டபத்துக்கு வீதியால் செல்லும் வாகனங்களின் வெளிச்சம் மட்டுமே இருந்துள்ளது.