'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

07 Jun, 2023 | 09:33 PM
image

நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அஸ்வின்ஸ்' எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்'. இதில் வசந்த் ரவி, விமலா ராமன், முரளிதரன், சரஸ்வதி மேனன், உதயா தீப், சிம்ரன் ப்ரீக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஏ. எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எல் எல் பி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாப்பிநீடு வழங்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படம் மாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே நடிகர் வசந்த் ரவி, 'தரமணி' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பதும், தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37