தேசிய விருது பெற்ற நடிகரான கிஷோர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'முகை' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு முரளி இராம நாராயணன் வெளியிட, படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ஜெ. அஜித்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'முகை'. இதில் கிஷோர் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அர்ஜுன் அக்காட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீ தர்மா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சந்தோஷ், பி. தர்மராஜுலு, ஜெ. அஜித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இவருடன் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “இது என்னுடைய முதல் திரைப்படம். ஒரே இடத்தில் நடைபெறும் கதை. படத்தின் நாயகனான கிஷோர் குமார் பெரும் பங்களிப்பு செய்தார். இணையதளத்தில் சில தொடர்களில் நடித்த நடிகை ஆர்ஷா சாந்தனி பைஜூவை தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். அவரும் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கிறது. உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM