பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

07 Jun, 2023 | 09:28 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பொலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலிகான், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்ஷித் பைகாரா- அங்கிட் பைகாரா ஆகியோர் இணைந்து பின்னணி இசையமைத்திருக்கிறார்கள். 

படத்தின் பாடலுக்கு சாசெட்- பரம்பரா அஜய் -அதுல் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ராமாயண இதிகாசத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று நிலையில், இப்படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் சீதையை ராவணன் கடத்தி செல்லும் காட்சிகளும்.., அசோகவனத்தில் சீதை தனிமையில் தவிக்கும் காட்சிகளும்.. வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37