மயக்கவியல் சிகிச்சை, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா..?

Published By: Ponmalar

07 Jun, 2023 | 09:13 PM
image

இன்றைய சூழலிலும் எம்மில் பலர் சத்திர சிகிச்சைக்காக முதுகு தண்டுவட பகுதியில் ஸ்பைனல் அனத்தீசியா எனப்படும் மயக்கவியல் சிகிச்சையை மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 மேலும் இத்தகைய மயக்கவியல் சிகிச்சையை எடுத்துக் கொண்ட பிறகு, நாளடைவில் முதுகு வலி, தலைவலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. 

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் விளக்கம் கேட்கையில், “தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களின் ஊடாக மயக்கவியல் சிகிச்சையை மேற்கொள்வதால், பக்கவிளைவுகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன” என தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில், “கடந்த தசாப்தங்களில் ஸ்பைனல் அனத்தீசியா எனப்படும் முதுகு தண்டுவட மயக்கவியல் சிகிச்சை, நோயாளிகளுக்கு அளிக்கும்போது அவர்களின் சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாகவும், மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஆனால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில், அதற்கான நிவாரண சிகிச்சையை பெற்றவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்தது.

பொதுவாக ஸ்பைனல் அனத்தீசியா எனப்படும் மயக்கவியல் மருந்து, முதுகு தண்டுவட பகுதியிலிருந்து வெளியேறும் நரம்புகளில்... வலிகளை உணராமல்  இருக்கச் செய்வதற்காக வழங்கும் ஒரு சிகிச்சை. 

இதன் போது மயக்கவியல் மருந்து எத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதனை அவதானித்து, அவர்களுடைய முதுகெலும்பில் உள்ள செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, சத்திர சிகிச்சை எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு இத்தகைய மயக்கவியல் சிகிச்சையின் பலன் நிறைவடைந்த பிறகு, வெகு சிலருக்கு மட்டும் தலைவலி மற்றும் முதுகு வலி ஏற்படும். அவர்களும் மருத்துவரின் தொடர் அவதானிப்பில் இருப்பதும், அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதுமாக இருந்தால், முழுமையாக இப்பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மேலும் தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் இத்தகைய சிகிச்சையின் போது மருந்து செலுத்துவதற்காக .03 மி மீ அளவுடைய ஊசிகள் பயன்படுத்தப்படுவதால், எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. அவர்களுக்கான சத்திர சிகிச்சையின் வெற்றி வீதமும் முழுமையாக கிடைக்கிறது.

டொக்டர் லட்சுமணன்
தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29