அமெரிக்காவின் தெற்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோர்ஜியா, அலபாமா, புளோரிடா மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்துள்ளது.

இச்சூழலில் குறித்த மாநிலங்களில் கடுமையான காற்று வீசியுள்ளதோடு, நேற்றைய தினம் சூறாவளியாக மாறி குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சூறாவளியில் சிக்கி இது வரை சுமார் 18 பேர்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வெளியேறிய குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிட முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.