தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை - பெருந்தோட்ட, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்

Published By: Vishnu

07 Jun, 2023 | 09:03 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தொழில் முயற்சியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை என பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு பின்னரான காலப்பகுதியில்  சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். 

முதற்கட்டமாக நிதி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு  விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

வங்கிகளின் ஊடாக கடன்களை பெற்றுக்கொள்ளல், கடனை மீளச் செலுத்துவதற்கு நிவாரண காலத்தை வழங்குதல் ஆகியவற்றை செய்ய அமைச்சின் ஊடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய மட்டத்தில் தொழிற்துறைகளை விரிவுப்படுத்த  மூலப்பொருட்கள்  விநியோக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்தியா உட்பட  நாடுகளின் ஊடாக கிடைக்கப் பெறும் உதவிகள் ஊடாக அவற்றை வழங்க  எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் சந்தை தொடர்பான பிரச்சினைகளின் போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தில் செலவுகள் அதிகரிக்கப்பட்டு உற்பத்தி பொருட்களின் விலைகளும் உயர்வடைந்தன. 

இதனால் சந்தையில் அவற்றை விற்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டது. எனினும் தற்போது நெருக்கடியில் இருந்து சற்று முன்னேற்றமடைந்துள்ளோம்.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் சிறந்த திட்டங்களை செயற்டுத்தியுள்ளது.பண வீக்கம் கட்டம் கட்டமாக குறைவடைகிறது. 

இவ்வருடத்துக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்த மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளது.நடைமுறையில் உள்ள  பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதேபோன்று கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47