‘பூஞ்செண்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

Published By: Ponmalar

07 Jun, 2023 | 09:01 PM
image

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் தொகுத்த ‘மின்னும் தாரகைகள்’ நூலினை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பட்டப் படிப்புக்காக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். 

அவரைப்  பற்றி மலேசியாவிலிருந்து வெளியிடப்படும் International Journal of Research and Innovation in Applied Science என்ற சர்வதேச சஞ்சிகையின் ஏப்ரல் 2023 இதழில் ஆங்கிலத்தில் பதிவு செய்திருப்பது நாங்களனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய விடயம். 

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்எழுதிய ‘பூஞ்செண்டு’ கவிதை நூல் வெளியீடும், மூத்த ஆளுமை தேசத்தின் கண், தமிழ்மணி மானா மக்கீனுக்கான பாராட்டு வைபவமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை  முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே பிரதம அதிதி தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறி அரபு மொழி பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம். எஸ். எம். ஜலால்தீன்  இவ்வாறு  கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் பற்றி சிலாகித்துப் பேசினார். மேலும் அன்றைய நிகழ்வில் பாராட்டப்பட்ட மூத்த ஆளுமை தேசத்தின் கண், தமிழ் மணி மானா மக்கீன் அவர்கள் பற்றியும் அவரது ஆளுமை குறித்தும் மிக உயர்வாகப் பேசினார். வீரகேசரியில் தொடங்கிய அவரது எழுத்துப் பணி இன்னும் தொடர்வதும் அவரது எழுத்துக்கள் கூர்மையாக இருக்கின்றமையும் மகிழத்தக்கவைகளாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். தமிழ் மணி மானா மக்கீன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடியின்றி சிறப்புடன் வாழ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய நூலாசிரியர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், இந்த நிகழ்வு நடப்பதற்கான காரணத்தை விளக்கினார்.

“எனது இந்த பூஞ்செண்டு நூல் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. நாட்டுச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இதற்கொரு வெளியீட்டு விழா வைப்பதில்லை என்று தீர்மானித்திருந்தேன். எனவே இந்நூலில் நான் வாழ்த்துக் கவிதை பாடியிருந்தோருக்கு இந் நூலினை கையளிக்கத் தீர்மானித்தேன். அதன்படி முதலாவதாக நான் நானா என்று அன்போடு அழைக்கும் தமிழ்மணி மானா மக்கீன் அவர்களிடம் சென்று கையளித்தேன். எனது நூலிலே அவரை வாழ்த்தி ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன் நான் பாடிய வாழ்த்துக் கவிதை இடம்பெற்றிருந்தது. அதனைப் பாதுகாத்து வைத்து நூலில் நான் இணைத்திருந்தது அவரை நெகிழச் செய்தது. உடனே அவர் கட்டாயமாக இதற்கொரு வெளியீட்டு விழா சிறிய ஒரு ஒன்றுகூடலுடனாவது செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தானே அதன் முதல் பிரதியை வாங்குவேன் என்றும் தெரிவித்தார்.  இடை இடையே இதனை அவர் ஞாபகப்படுத்த தவறவில்லை அண்மையில் அவரது நிழலான மனைவி அஸ்தா மக்கீன் தனது கணவரின் 86 ஆவது பிறந்தநாள் மே மாதம் 29 ஆம் தேதி என்று குறிப்பிட்டார். அப்போதுதான் என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அவரை கௌரவிக்கும் முகமாக இவ்விழாவை செய்வோம் என்று தீர்மானித்தேன்.  இதனை ஒரு சிறு ஒன்று கூடலாக செய்ய தீர்மானித்தேன். எனவே இது உண்மையில் எனது நூல் வெளியீட்டு விழா அல்ல அவருக்காக அவரைப் பாராட்டி எடுக்கப்படும் விழா என்று தான் சொல்வேன்” என்று தெரிவித்தார

கொழும்பு  டீ. எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவன் சிராப்  சாஹிரின் கிராஅத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

எம்மை விட்டும் பிரிந்த இலக்கிய ஆளுமைகள், கலைஞர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கான மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.

நூலாசிரியரின் சமர்ப்பணக்  கவிதையை அறிவிப்பாளர் லைலா அக்ஷியா வாசித்தார்.

அல் ஹிதாயா தேசிய கல்லூரி, முன்னாள் அதிபர், தேசமான்ய, ஹாஜியானி நாகூர் உம்மா காதர் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அத்துடன் நூலாசிரியர் நூருல் அயினுக்கு புகழாரம் சூட்டி பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.

சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, காவ்யாபிமானி கலைவாதி கலீல் ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

வரவேற்புரையை இலக்கியச் செம்மல் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்  நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகளை காவ்யாபிமானி கலைவாதி கலீல், பாரம்பரியம் புகழ் எம். எஸ். எம். ஜின்னா ஆகியோர் வழங்கினர். பிரபல பாடகியும் சிரேஷ்ட வானொலி கலைஞருமான

இசைக்கோகிலம் நூர்ஜஹான் மர்சூக் வாழ்த்துப்பாடல் இசைக்க வலம்புரி கவிதா வட்டச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், கலாபூஷணம் மஸீதா அன்சார்,  ரினூஃபா பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துக்கவிதை பாடினர். கவிதாயினி சுஹைதா ஏ. கரீம் தியத்தலாவ எச். எம். ரிஸ்னாவின் கவிவாழ்த்தினை வாசித்தார். பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் நூல் நயவுரை வழங்கினார்.

பூஞ்செண்டு நூலின் முதல் பிரதியை மூத்த இலக்கிய ஆளுமை 'தேசத்தின் கண்', தமிழ்மணி மானா மக்கீன் பிரதம அதிதி பேராசிரியர் மௌலவி எம். எஸ். எம்.   ஜலால்தீன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடந்த மாதம் 29 ஆம் திகதி தனது 86 ஆவது அகவையை கொண்டாடிய  மூத்த இலக்கிய முதுசொம் தேசத்தின் கண், தமிழ்மணி மானா மக்கீன் அவர்களைப் பாராட்டி நிகழ்வின் பிரதம அதிதி பேராசிரியர் எம். எஸ். எம். ஜலால்தீன் பொன்னாடைப் போர்த்த,    சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்  சந்தன மாலை அணிவித்தார்.  பூஞ்செண்டு நூலாசிரியர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்  அவருக்கான வாழ்த்துக் கவிதையை வாசித்தார். அவரது துணைவர் நஜ்முல் ஹுசைனுடன் இணைந்து தமிழ்மணி, தேசத்தின் கண் மானா மக்கீன் அவர்களுக்கும், அவரது நிழலான துணைவியார் அஸ்தா மக்கீன் அவர்களுக்கும்  நினைவுச்சின்னம் வழங்கி பரிசுகள் வழங்கி வைத்தனர். 

கவிஞர் ரஷீத் எம். றியாழ், இம்ரா இம்தியாஸ் ஆகியோர் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினர். பூஞ்செண்டு நூலாசிரியர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஏற்புரை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46