வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி வெளியிலிருந்து வந்த தனது மனைவியை, கணவன் சுட்டு கொன்ற சம்பவம்  அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள கோல்ட்ஸ்போரோ நகரிலுள்ள பில்லி வில்லியம்ஸ் என்பவர் அவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் என்பவரை சுற்று கொண்டுள்ளார்.

ஜினா வில்லியம்ஸ் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த நிலையில், பணி முடிந்து இரவில் வீடு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே,  கண் விழித்த பில்லி வில்லியம்ஸ் வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி மனைவியை சுட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்த போது அவர்களின் இரு குழந்தைகளும் வீட்டில் உறக்கத்தில் இருந்துள்ளனர். மேலும்  போலீசார் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.