(எம்.நியூட்டன்)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் நாவற்குழியில் திங்கட்கிழமை (5) 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
தமிழ் தேசிய பசுமை இயக்கமானது மாணவர்களிடையே சூழல் பற்றிய அறிவைப் புகட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களை சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் 'பசுமை அறிவொளி' என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி, முத்தமிழ் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வருடம் ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசினை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை தெரிவுசெய்துள்ளது.
இதற்கமைய, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்டிக்கின் பிடியில்’ என்ற கையேட்டினையும் வழங்கிவைத்தார்.
அத்தோடு, டொரன்டோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM