மாதவன் - கங்கனா இணையும் தமிழ் படம்

Published By: Ponmalar

07 Jun, 2023 | 08:31 PM
image

நடிகர் மாதவனும், பொலிவுட் நடிகை கங்கணா ரனாவத்தும் முதன்முறையாக தமிழ் திரைப்படமொன்றில் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'அயோத்தி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்று தயாராகிறது. 

இந்தத் திரைப்படத்தில் நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடிக்க, பொலிவுட் நடிகை கங்கணா ரனாவத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் மாதவன் தற்போது அறிமுக இயக்குநர் சசிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியான ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

இவ்விரண்டு திரைப்படங்களையும் நிறைவு செய்த பிறகு இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க மாதவன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

'தனு வெட்ஸ் மனு' மற்றும் 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' எனும் இரண்டு இந்தி திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இந்த ஜோடி, முதல் முறையாக தமிழில் இணைந்து நடிப்பதால், வியாபார ரீதியாகவும்.. விமர்சன ரீதியாகவும்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37