சவூதியின் அல் இத்திஹாத்தில் இணைந்தார் கரீம் பென்சிமா

Published By: Sethu

07 Jun, 2023 | 11:29 AM
image

பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா, சவூதி அரேபியாவின் அல் இத்திஹாத் கழகத்தில் இணைந்துள்ளார். 

35 வயதான கரீம் பென்சிமா, இறுதியாக ஸ்பெய்னின் றியல் மட்றிட் கழகத்துக்காக 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். கடந்த 14 வருடங்களில் அக்கழகத்துக்காக 648 போட்டிகளில் 354 கோல்களை அவர் புகுத்தியிருந்தார்.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் அல் இத்திஹாத் கழகத்தில் விளையாடுவதற்கு 3 வருட காலத்துக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பென்சிமா இங்கே. ஒரு புதிய சிங்கம் கர்ச்சிக்கப் போகிறது. இத்திஹாத்துக்கு வரவேற்கிறோம் என அக்கழகம் தெரிவித்துள்ளது.

அல் இத்திஹாத் கழகம், ஏசியன் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை இரு தடவைகள் வென்ற கழகமாகும்.  ஆசிய கிண்ணம், அரபு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும் அக்கழகம் வென்றுள்ளது. சவூதி அரேபியாவின் உள்ளூர் போட்டிகளிலும்  9 லீக் கிண்ணங்கள், 5 மன்னர் கிண்ணங்கள், 8 முடிக்குரிய இளவரசர் கிண்ணங்களை அக்கழகம் வென்றுள்ளது.

பிரெஞ்சு அணிக்காக  97 போட்டிகளில் கரீம் பென்சிமா கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான பிரெஞ்சு குழாமில் இடம்பெற்றிருந்த போதிலும் காயம் காரணமாக அவர் போட்டிகளில் பங்குபற்றவில்லை.  சர்வதேச போட்டிகளிலிருந்து கடந்த டிசெம்பர் மாதம் ஓய்வை அறிவித்திருந்தார்.

றியல் மட்றிட்டில் பென்சிமாவின் முன்னாள் சகாவான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் மற்றொரு முன்னிலைக் கழகமான அல் நாசர் கழகத்தில் கடந்த ஜனவரியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. (சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31