திருகோணமலை, மூதூர் கடலில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள்  நீரில் மூழ்கி  பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நேற்று முன்தினம் கம்­பளை, துன்­ஹிந்த பகு­தியில் மகா­வெலி கங்­கையில் நீராடச் சென்ற 5 சிறு­வர்­களில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூதூரில் இவ்வாறனதொரு துயரச் சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளது.

இவ்வருடம் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு  விடுமுறை காலப்பகுதியில் மூதூருக்கு ஜமாத் பனிக்காக சென்ற 7 மாணவர்களில் மூன்று மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் மூதூர், கபீப் நகரிலுள்ள கடலிலுக்கு குளிக்கச் சென்றதாகவும், இதன்போது மூன்று பேர்  நீரில் மூழ்கி  பலியானதுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

16 வயதுடைய காதர் ஹசன் அப்துல்லா, 19 வயதுடைய மொஹமட் நவுசாட் உகாஸ், 19 வயதுடைய மொஹமட் இக்ராம்  ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.