ஆசிய கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் விலகக்கூடும்?

Published By: Vishnu

07 Jun, 2023 | 11:02 AM
image

(என்.வீ.ஏ.)

இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற  தங்களால் முன்மொழியப்பட்ட  யோசனையிலிருந்து இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பின்வாங்கியதை அடுத்து, வேறு வழியின்றி, வரவேற்பு நாடான பாகிஸ்தான் ஆசிய கிண்ணப் போட்டியிலிருந்து விலகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

3 முதல் 4 போட்டிகளை பாகிஸ்தானிலும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான நாட்டிலும் நடத்தலாம் என்ற யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி முன்மொழிந்திருந்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை நகர்த்துவதற்கான இந்திய கட்டுப்பாட்டுச் சபையின் உந்துதலை இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் ஆதரித்துள்ளதாக இப்போது தெளிவாகியுள்ளது.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகராக சந்திக்க வாய்ப்புள்ளது. அல்லது இந்த மாத இறுதியில் முறையான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது..

'ஆனால், இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற தமது முன்மொழிவை இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் ஆதரிக்கவில்லை என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இப்போது அறிந்திருக்கிறது' என விடயங்களை நன்கு அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

சேதி ஏற்கனவே தனது கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடனும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, ஆசிய கிண்ணத்திற்கான எந்தப் போட்டியையும் சொந்த மண்ணில் நடத்த முடியாவிட்டால், பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

போட்டியை பாகிஸ்தானில் இருந்து ஒரு நடுநிலையான நாட்டிற்கு நகர்த்தினால் தமது நாடு போட்டியில் பங்கேற்காது என்று சேதி பலமுறை கூறியிருக்கிறார். இந் நிலையில் ஆசிய கிண்ணத்தை புறக்கணிக்கும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இருப்பதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

'பாகிஸ்தானுக்கு இரண்டு வழிகளே உள்ளன. நடுநிலையான மைதானத்தில் போட்டியில் விளையாடுங்கள் அல்லது விலகுங்கள்' என்று ஆசிய கிரிக்கெட் பேரவை வட்டாரம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் விளையாடாவிட்டாலும் இந்த சுற்றுப் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் என்றே அழைக்கப்படும். எனினும் பாகிஸ்தான் இல்லாவிட்டால் ஒளிபரப்பாளர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் இன்னும் ஒரு நாட்டிலும் நடத்துவது நிர்வாக ரீதியாகவோ நிதி ரீதியாகவோ சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில்  இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள்  உள்ளன.

இந்த ஆண்டு ஆசியக்  கிண்ண  கிரிக்கெட்   முற்றிலும் கைவிடப்படலாம் என்றும், உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 50 ஓவர் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் அந்த வாட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் நடத்தப்படாவிட்டால் அப் போட்டி நடைபெறவிருந்த காலப்பகுதியில் நான்கு அல்லது ஐந்து நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருவதாகவும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தீர்மானத்தால் கிரிக்கெட் சபைகளுக்கு இடையிலான உறவுகளில் என்ன வகையான தாக்கம் ஏற்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிய கிண்ணத்திற்கான சகல போட்டிகளையும் நடத்த இலங்கை முன்வந்ததை அடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும்போது சில சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தனது முன்னைய முன்மொழிவை பாகிஸ்தான் இப்போது வாபஸ்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க உலகக் கிண்ணப் போட்டிக்கு தனது அணியை இந்தியாவுக்கு அனுப்பும் முடிவைப் பொறுத்தவரை, அண்மைக்கால நிகழ்வுகள் பாகிஸ்தான் தனது கைவரிசையைக் காட்ட தூண்டக்கூடும்  எனவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22