பொலிவூட் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் ஒருவரான கரண்  ஜோகர் மற்றும் பூனம் சக்ஸேனா இணைந்து எழுதியுள்ள 'என் அன்சுயிட்டபல் போய்' (An Unsuitable Boy) எனும் ஓரின சேர்க்கை சார்பான நூல்  பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நூல் பற்றிய அறிமுகத்தில் தான் ஒரு  ஓரின சேர்க்கையாளர் என்பது யாவரும் அறிந்த விடயமெனவும், இருப்பினும்  வெளிப்படையாக அதை வெளிப்படுத்தினால்  சட்டப் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய சட்ட விதிகளின் படி ஓரின சேர்க்கை என்பது இயற்கைக்கு எதிரான குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு அதற்கு எதிரான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நூல் பொலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருகானால் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் நூல் பற்றிய விமர்சனங்களும் வலுப்பெற்று வருகின்றன.

தனது சிறு வயது முதலான அனுபவ நிகழ்வுகளை குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ள நூலில், முழுமையாகவே ஓரின சேர்க்கை பற்றிய கருத்தாடல் வலு பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

அவை ஓரின சேர்க்கையாளர்கள் கருத்துக்களுக்கு வலுசேர்ப்பதையும், அவர்களை நியாயப்படுத்துவதாயும் அமைந்துள்ளது.

மேலும் கரண் ஜோகரின் படங்களில் அதிகளவான ஓரின ஈர்ப்பு காட்சிகள் இருப்பதோடு, அவர் காட்சிகளை பதிவு செய்யும் படப்பிடிப்பு இடங்களும் ஆடம்பரமானவையாக இருக்கும். குறித்த நூல் வருகையால் பல்வேறுபட்ட விமர்சனங்களை அவர் எதிர் கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கையிலும் ஓரின சேர்க்கை தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.