கொழும்பை சுற்றிவளைக்க வருபவர்களை பொதுமக்களே விரட்டியடிப்பார்கள் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

07 Jun, 2023 | 09:55 AM
image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

கொழும்பை சுற்றிவளைக்கும் நோக்கத்துடன் நாளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம்,பொலிஸார் தேவையில்லை.பொது மக்களே விரட்டியடிப்பார்கள். ஒரு சில நோயை குணப்படுத்த கடுமையான சிகிச்சை முறைகளை ஜனாதிபதி கையில் எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற  சிவில் விமான சேவை மற்றும் கப்பற்துறை சேவை  சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்க வேண்டும் எரிபொருள்,எரிவாயு,பால்மா ஆகியவற்றுக்கான வரிசைகளில் மக்கள் நாட்கணக்காக காத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் தமது தமது விருப்பத்துக்கேற்ப நாட்டை வைத்திருக்க முடியும் என சிலர் எதிர்பார்த்துள்ளார்கள்.

பாரிய பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.இவ்வாறான பின்னணியில்  ஜூன் 8 ஆம் திகதி நாளை கொழும்பை சுற்றிவளைக்க போவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள்  நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதை விரும்பவில்லை. இந்த நிலையை கெடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் தான் வீதிக்கிறங்கி கொழும்பை சுற்றி வளைக்க போவதாக குறிப்பிடுகிறார்கள்.

நாளைய தினம்  கொழும்பை சுற்றிவளைக்கும் நோக்கத்துடன் வருபவர்களை இராணுவமோ,பொலிஸாரோ விரட்ட தேவையில்லை. மக்களே விரட்டியடிப்பார்கள். நாடு பொருளாதார பாதிப்பு என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவருக்கு ஏற்றப்பட்டுள்ள 'சேலைன்' போத்தலை பிடுங்கி எறிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது செய்ய முயன்றால் மக்களுக்கு கோபம் வரும். ஆகவே குறுகிய நோக்கத்துடன் செயற்படுபவர்களை மக்களே விரட்டியடிப்பார்கள்.

அதேவேளை சில நோய்களை குணமாக்க சில சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இவ்வாறான நோய்கள் உள்ளவர்களை குணமாக்க அந்த சிகிச்சைகளை   ஜனாதிபதி கையில் எடுக்க வேண்டும். அப்போது தான் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27