தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை கைதுசெய்வதற்காக பொலிஸார் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று
அவரை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான் இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள நிலையில் தன்னை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவது குறித்து சபாநாயகருக்கு தெரிவிப்பதற்கு அவரை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் அது சாத்தியமாகவில்லை என்பதால் பிரதிநிசபாநாயகரை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு ஏஎஸ்பி தர அதிகாரியொருவர் தனது வீட்டிற்கு வந்துள்ளதை பிரதிசபாநாயகருக்கும் சபாநாயகருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
தான் இன்று விசேட உரையாற்றவுள்ளதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தியவேளை அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் நீங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையம் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
இதனை பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்துமாறு சபாநாயகரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM