உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் - சஜித் அரசாங்கத்திற்கு சவால்

Published By: Vishnu

06 Jun, 2023 | 07:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் நாங்கள் அதற்கு தயார். 50வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமா இல்லாயா என்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. 

இந்த சுற்றறிக்கையின் மூலம்,உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க,ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.

அத்துடன், நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்தார். 50வீத பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என பார்ப்பதற்கு தேர்தலை நடத்துமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை  நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதி தேரதலை நடத்துங்கள். அதற்கு தேவையான பெரும்பான்மை நாங்கள் பாராளுமன்றத்தில் பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்.

ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை மேன்முறையீட்டு நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து,இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல, சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக அமையும்.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57