(நெவில் அன்தனி)
தென் கொரியாவின் யெச்சியொன் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய 12 வீராங்கனைகளில் இலங்கையின் ரனிந்தி பெஹன்சா கமமே கடைசி இடத்தைப் பெற்றார்.
இன்றைய போட்டியில் 1.60 மீற்றர் உயரத்தை தனது இரண்டாவது முயற்சியில் தாவிய ரனிந்து பெஹன்சா, 1.65 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு எடுத்த 3 முயற்சிகளிலும் தோல்வி கண்டார். அத்துடன் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
அப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பானோகோன் சய்புல்லாஈவா 1.84 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இந்திய வீராங்கனை பூஜா 1.82 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் தாய்ப்பே வீராங்கனை பெய் சுவான் லின் 1.82 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கதையும் வென்றனர்.
இவர்கள் இருவரும் 1.82 மீற்றர் உயரத்தை ஒரே தடவையில் தாவிய போதிலும் அதற்கு முன்னர் 1.80 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியில் தாவியதற்காக வெள்ளிப் பதக்கம் பூஜாவுக்கு கிடைத்தது. தாய்ப்பே வீராங்கனை 3ஆவது முயற்சியிலேயே 1.80 மீற்றர் உயரத்தை தாவினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM