அகிம்சை போராட்டம் அடக்கி ஒடுக்­கப்­பட்ட போது அது ஆயுத போராட்­ட­மாக மாறி­யது. அந்த போராட்­டத்­திற்கு இளைஞர் யுவ­தி­களும் ஈர்க்­கப்­பட்­டார்கள். மலை­யக இளைஞர், யுவ­திகள் மத்­தி­யிலும் அந்த போராட்டம் செல்­வாக்கு செலுத்­தி­யது. இதற்கு அமரர்.சந்­தி­ர­சே­கரன் குறிப்­பிடக் கூடி­ய­ளவு பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கின்றார் என்­பதை மறக்க முடி­யாது. எவன் ஒருவன் மன பலத்தை கொண்­டி­ருக்­கின்­றானோ எவன் ஒருவன் தனது இலட்­சி­யத்­திற்கு இறுதி வரை போரா­டு­கி­றானோ அவன் வெற்றி பெறுவான் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் அமரர்.பெரி­ய­சாமி சந்­தி­ர­சே­க­ரனின் 6 ஆவது சிரார்த்த தினம் நேற்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்­ண­பவன் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தலை­மையில் நிகழ்வு இடம்­பெற்­றது.

இதன்­போது மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் இளைஞர் அணி தலை­வ­ரு­மான ஆர்.ராஜாராம், அட்டன் நகர சபையின் முன்னாள் தலைவர் நந்­த­குமார் உட்­பட பெருந்­தி­ர­ளான ஆத­ர­வா­ளர்­களும் கலந்­து­கொண்­டனர்.

தொடர்ந்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா உரை­யாற்­று­கையில்..

எவன் ஒருவன் மன பலத்தை கொண்­டி­ருக்­கின்­றோனோ எவன் ஒருவன் தனது இலட்சியத்திற்கு இறுதி வரை போரா­டுகின்றானோ அவனே வெற்றி பெறுவான். ஒரு போராட்­டத்தை தாங்கி கொள்­பவன் தான் இறு­தியில் வெற்றி பெறுவான். இதனை மலை­யக மக்­களும் வட­கி­ழக்கு மக்­களும் நன்கு அறி­வார்கள்.

இரா­ஜ­தந்­திர ரீதி­யாக நாம் யுத்­தத்தில் வெற்றி பெறா­மையின் கார­ண­மாக அதன் நினை­வு­களை மீட்டுக் கொண்­டி­ருக்­கின்றோம். சந்­தி­ர­சே­கரன் பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டி­ருக்­கின்றார்.

அவர் ஒருபோதும் மலை­யக மக்கள் வட­கி­ழக்கு மக்கள் என்று பிரித்துப் பார்த்­த­தில்லை. எல்­லோரும் தமிழ் அன்­னையின் பிள்­ளை­க­ளா­கவே பார்த்தார். அவ­ரு­டைய நினைவை நன்­றிக்­கு­ரிய தலை­வர்­க­ளாலும் தொண்­டர்­க­ளாலும் நினைவு கூரும் இந்த வேளையில் நானும் அதில் கலந்து கொள்­வதில் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம். இன்னும் இந்த தோட்­டங்­களில் அடி­மை­க­ளாக இருக்­கின்றோம் என இன்று நான் மலை­யக மக்­களை சந்­தித்த பொழுது அவர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர். இதனை நானும் ஏற்­றுக்­கொள்­கின்றேன். இதற்கு விடை காணப்­பட வேண்டும். அதற்கு நாங்­களும் உறு­து­ணை­யாக இருப்போம்.

இந்த நாட்டில் ஆண்­டாண்டு கால­மாக உழைத்த இந்த மக்­க­ளுக்கு அவர்­க­ளுக்­கான காணியை வழங்க ஏன் இன்று தயக்கம் காட்­டப்­ப­டு­கி­றது. நிலம் இருந்தால் தான் அவர்­க­ளுக்கு வீடு­களை அமைத்­துக்­கொள்ள முடியும். இன்றும் நாம் போராடிக் கொண்டு தான் இருக்­கின்றோம்.

பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு செல்­கின்ற எமது மாண­வர்களில் அதி­க­மா­ன­வர்கள் கலைத்­து­றையை படிக்­கின்­றார்கள். விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், வர்த்­த­கத்­துறை இவற்றை அவர்கள் விரும்­பிக்­கற்க அவர்கள் முன்­வர வேண்டும். அதற்­கான வச­தி­களை அர­சாங்கம் செய்து கொடுக்க வேண்டும். அல்­லது தையல்­து­றையில் புதிய தொழில்­நுட்­பங்­களை கற்க வேண்டும். நாங்கள் போரின் கார­ண­மாக கல்­வியின் உச்­சத்­தையும், தொழில்­நுட்­பத்­தையும் கற்க முடி­யாத நிலை இருந்­தது. இப்­போது அது படிப்­ப­டி­யாக மாற்றம் அடைந்து வரு­கின்­றது. இந்த நிலை மலை­ய­கத்­திலும் இருப்­பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே இங்கு மாற்­றங்கள் கொண்டு வரப்­பட வேண்டும்.

8ஆம் வகுப்­பிற்கும் 10 வகுப்­பிற்கும் இடையில் மாண­வர்கள் அவர்­க­ளுக்­கான துறை­களை தெரிவு செய்து கற்­ப­தற்­கான சூழ்­நிலை ஏற்­பட வேண்டும். அதனை கல்வி இரா­ஜாங்க அமைச்சர் தற்­பொ­ழுது படிப்­ப­டி­யாக செய்து வருவதை நாங்கள் அறிவோம். இன்று கல்வித் துறை முன்னேற்றம் அடைவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று மலையக மக்களும் வடகிழக்கு மக்களும் வேறுபட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அமைதியான முறையில் ஜனநாயக வழியில் நீங்கள் உங்களுடைய நிலங்களுக்காக போராட வேண்டும் என்றார்.