எம்மில் பலரும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதில் போதிய அக்கறையை காட்டுவதில்லை. இவர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு இரு மடங்கு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
எம்முடைய மூளைப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் தான் பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மற்றவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள் என அண்மைய ஆய்வின் முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்களின் ரத்த நாளங்களில் அழற்சி எனப்படும் வீக்கம் ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. பாதிப்படைந்த ரத்த நாளங்களில் தமனிக் குழாய் தடிப்பு ஏற்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ஒட்சிசனின் அளவு குறைந்து, பக்கவாத பாதிப்பு உண்டாகிறது.
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு இதய பாதிப்பு, கொலஸ்ட்ரால் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்த பாதிப்பு, உடற்பருமன் போன்ற நோய்கள் ஏற்படுவதால்... பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது .
இதனால் மருத்துவர்கள் ரத்த சர்க்கரையின் அளவை மருந்து, மாத்திரை, உணவு முறை, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முற்றாக தவிர்க்க வேண்டும். நாளாந்தம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையையும், உடற்பயிற்சியையும் உறுதியுடன் பின்பற்ற வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிடில் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்பதால், நோயாளிகள் இதை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
டொக்டர் ராஜேஷ்,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM