மொபைல் ஊடகவியல் மற்றும் டிஜிட்டல் கதைகூறலுக்கென காணப்படும் சக்தியை கொண்டாடும் இரண்டு நாள் நிகழ்வான MoJo Lanka விழாவினை அறிவிப்பதில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பு (USAID) மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றுச் சபை நிறுவனமாகிய (IREX) நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
இந்த விழா, எதிர்வரும் ஜூன் மாதம் 24-25 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள Marriott Courtyard ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
துரிதமாக வளர்ந்துவரும் மொபைல் ஊடகவியலில் தடம் பதிப்பதற்கு, ஊடகவியலாளர்கள், கதைசொல்லிகள் மற்றும் படைப்பாளிகளுக்கு MoJo Lanka ஒரு சிறந்த தளத்தினை வழங்கும்.
இந்நிகழ்வில், பிரஜை ஊடகவியலின் சக்திவாய்ந்த தாக்கம், போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களை வளர்ப்பதற்கான நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய விடயப்பரப்புகளின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் இணைந்து பல்வேறு குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
மோஜோ நிபுணரும், #MoJoFest நிறுவுனருமான Glen Mulcahy முக்கிய பேச்சாளராக கலந்து கொள்வதில் இவ்விழா பெருமிதம் கொள்கிறது. மொபைல் ஊடகவியலின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இவர்பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்.
அத்தோடு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் உரையாற்றவுள்ளார். MoJo கதைசொல்லலின் நுணுக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் வகையில், உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் வழிகாட்டல் அமர்வும் இடம்பெறும்.
தொழில் ரீதியில் பாண்டித்தியம் பெற்ற, முழுக்க முழுக்க வீடியோ-பத்திரிக்கையாளர்களால் பணியமர்த்தப்பட்ட முதல் பிபிசி செய்தி அறையின் ஆசிரியரான David Hayward, மொபைல் அறிக்கையிடலின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக ஏனைய தொழில்சார் வல்லுநர்களுடன் இணைந்துகொள்வார். சிறந்த கதையொன்றை படமாக்குவது பற்றி, விருதுபெற்ற மொபைல் ஊடகவியலாளரும், தயாரிப்பாளருமான கே.சி சாரங்க உரையாற்றுவார்.
“செய்தித்துறையின் மிகப்பெரிய புரட்சியாக மொபைல் ஊடகவியல் காணப்படுகின்றது. யாராக இருந்தாலும் கையடக்கத் தொலைபேசி ஊடாக, உடனடி செய்திகளை வழங்குவதற்கு ஒரு படப்பிடிப்பாளராக, செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக மற்றும் வெளியிடுபவராக அவரால் செயற்பட முடியும்.
சிறந்த பத்திரிகை கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் தவறான மற்றும் போலிச் செய்திகள் அதிகரித்து வருகின்றன, அவற்றைத் தணிக்கும் நோக்கில், இந்த முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கின்றோம். ஜனநாயகத்தின் பிரதான தூண்களில் ஒன்றாகக் காணப்படும் ஊடகத்துறை ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்கா ஒரு வலுவான ஆதரவாளராக செயற்படுகின்றது. விசேடமாக, இலங்கையின் ஜனநாயகமானது நீண்ட, பெருமைமிக்க மற்றும் நெகிழ்திறன் கொண்டதாகும். இதுவே, இரு நாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால நெருங்கிய பங்காளித்துவத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் நிலைப்பாடாகும்” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான USAIDஇன் செயற்பாட்டு பணிப்பாளர் கப்ரியேல் க்ராவ் (Gabriel Grau) குறிப்பிட்டார்.”
இலங்கையில் மொபைல் ஊடகவியலை மேம்படுத்துவதில் USAIDஇன்ஆதரவுடனான , ஜனநாயக இலங்கைக்கான ஊடகங்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் (MEND) ஒரு உந்துசக்தியாக செயற்படுகின்றது. அதன் உறுதியான வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
குறிப்பாக, வளர்ந்துவரும் மற்றும் ஏற்கனவே இத்துறையில் உள்ள படைப்பாளிகளுக்குஒரு வலையமைப்பை உருவாக்குவதற்கு, அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கு மற்றும் அவர்களது பணியினை வெளிப்படுத்துவதற்கான தளத்தினை இது வழங்குகின்றது.
“MoJo Lanka என்பது ஒரு விழாவினை விட மேலானது,” என USAIDஇன் நிதி அனுசரணையில் செயற்படும் MEND நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதானி Jean MacKenzie குறிப்பிட்டார். “இலங்கையில் கதைகள் கூறப்படும் மற்றும் கேட்கப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வளர்ந்துசெல்லும் போக்கினை இது குறிக்கிறது. மொபைல் தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் இன்றைய இணைய உலகம் வழங்கும் உள்ளடக்க உருவாக்கத்திற்கான பரந்த சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதன் மூலம், ஊடகத்துறையில் நாம் புதிய நோக்குநிலைகளையும் புதிய குரல்களையும் கொண்டுவருகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் சிறந்த ஊடகவியல் திறமைகளை முன்னிலைப்படுத்துவது மட்டுமன்றி, நாட்டின் டிஜிட்டல் கதைகூறலின் ஒரு புதிய அலையை ஊக்குவிக்கும் ஒரு மாற்றம் நிறைந்த நிகழ்வாக இந்த விழா அமையும் என உறுதியளிக்கின்றோம்.
MoJo Lanka பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் - https://mojolanka.lk/.
USAID ஊடாக அமெரிக்க மக்கள் வழங்கிய உதவியினால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM