எம்மில் பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு நாளாந்தம் இயல்பான எண்ணிக்கையை விட கூடுதலான முறைகளில் சிறுநீர் கழிப்பர். அதன் போது அவர்களுக்கு வலி ஏற்படும் இதற்கு இயல்பான சிறுநீர் பாதை தொற்று என அவதானிப்பது இயல்பு.
ஆனால் இடுப்பு வலியின் காரணமாகவும், சிறுநீர்ப்பை அழுத்தம், சிறுநீர்ப்பை வலி போன்றவற்றின் காரணமாகவும் அசௌகரியமான முறையில் வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறும்.
இதற்கு மருத்துவ மொழியில் இன்டர்சிடீடியல் சிஸ்டிடிஸ் எனும் இடைநிலை சிறுநீர்ப்பை அழற்சி என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சை வழங்கப்பட்டு முதன்மையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என மருத்துவர் தெரிவிக்கிறார்கள்.
எமது சிறுநீர்ப்பை என்பது சிறுநீரை சேமித்து வைக்கும் தசையிலான உறுப்பு. சிறுநீர்ப்பை நிரம்பும் வரை விரிவடைந்து, சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தினை இடுப்பு நரம்புகள் மூலமாக மூளைக்கு சமிங்ஞை அனுப்பி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. இந்நிலையில் சில பெண்களுக்கு இதில் பாதிப்பு ஏற்படும்போது சிறுநீர் விரைவாக கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இடைநிலை சிறுநீர்ப்பை அழற்சி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மாறுபடும்.
மாதவிடாய் சுழற்சி, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது, மன அழுத்தம், உடற்பயிற்சி மற்றும் பாலியல் செயல்பாடு போன்ற பொதுவான தூண்டுதல்களின் போதும் சிறுநீர் கழிப்பது சற்று வலியுடன் இருக்கும்.
அதே தருணத்தில் பெண்களின் இடுப்பு பகுதி, பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் இடையேயான வலி, ஆண்களுக்கு விதைப்பை மற்றும் ஆசனவாய் இடையேயான வலி, நாட்பட்ட இடுப்பு வலி, ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்திருக்கும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 முறை சிறுநீர் கழிப்பது... போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், இவை இன்டர்சிடீடியல் சிஸ்டிடிஸ் எனும் இடைநிலை சிறுநீர்ப்பை அழற்சியின் அறிகுறியாகும்.
இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் சிறுநீர் சோதனை, சிறுநீர் பயாப்ஸி, பொட்டாசியம் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். இவர்களுக்கு எளிமையான மருந்து மாத்திரை மூலமாக நிவாரணம்.., சிலருக்கு பிஸிக்கல் தெரபி, சிலருக்கு ஸ்டீராய்டு அல்லாத வலியை குறைக்கும் நிவாரண மருந்துகள் போன்றவற்றை அளிப்பர். வெகு சிலருக்கு Transcutaneous Electrical Nerve Stimulation எனும் பிரத்யேக சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்
டொக்டர் குரு பாலாஜி,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM