எம்மில் பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால், இளம் வயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள்.
ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலையுடன் குறிப்பிடுகிறது.
சர்க்கரை நோயாளிகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கான தீர்வுகளை மருத்துவ நிபுணர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.
இரவில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போதும்.. சர்க்கரையின் அளவு குறையும் போதும்.. தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது... இரவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்.
ரத்த சர்க்கரையின் அளவு குறையும்போது... பசியெடுப்பதால், பால் அல்லது பழங்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, இதன் காரணமாக உறக்கத்திலிருந்து எழுந்து விடுவோம். இதன் காரணமாகவும் தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுகிறது.
கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவினை கொண்டவர்கள் இரவு நேரத்தில் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அதாவது இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால், இவர்களுடைய கால், பாதம் ஆகிய பகுதிகளில் எரிச்சலும், குத்தலும் ஏற்படும்.
இதன் காரணமாகவும் இவர்களுக்கு உறக்கமின்மை பாதிப்பு உண்டாகிறது. இதைத் தொடர்ந்து இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பாலின பேதமின்றி இரவு நேரத்தில் குறைவான ஒளியில், கைபேசியிலுள்ள டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்வை இடுகிறார்கள்.
இதனால் கண்களில் சோர்வு ஏற்படுவதுடன், இரத்த சர்க்கரையின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டு, உறக்கமின்மை பாதிப்பினை உண்டாக்குகிறது. இரவு நேரத்தில் சமூக வலைதளப் பக்கத்தினை பார்வையிடுவதன் மூலம் எம்முடைய மூளை பகுதியில் தொடர்ந்து தூண்டுதல்கள் ஏற்படுவதால், அந்த தருணத்தில் உறக்கத்திற்குரிய பிரத்யேக ஹோர்மோனின் இயங்கு திறன் பாதிக்கப்படுகிறது. இதனாலும் உறக்கமின்மை பாதிப்பு உண்டாகிறது.
வேறு சிலருக்கு உடல் எடையின் காரணமாகவும், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாகவும் தூக்கமின்மை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இவர்களுக்கும் ரத்த சர்க்கரையின் அளவு சமச்சீரற்ற நிலையில் இருப்பதை உணரலாம். இதன் காரணமாக இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆழ்ந்த உறக்கம் தான் இத்தகைய பாதிப்பிற்கு சரியான தீர்வு.
நாளாந்தம் சீராக உறங்குவதற்கான சூழலை புறத்திலும், அகத்திலும் நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்குரிய மருந்து மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதீத உடல் எடையின் காரணமாகவும், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதன் காரணத்தினாலும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேக கருவி ( ஸீ பேப்) மூலம் குறட்டையை தடுத்து உறக்கத்தை சீராக்கி இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். மேலும் மூச்சுப் பயிற்சி, புத்தக வாசிப்பு, மெல்லிசையை கேட்பது... போன்ற பயிற்சிகளை இடையறாது மேற்கொண்டால், உடலில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் பிரத்தியேக ஹோர்மோனின் உற்பத்தி சீராவதுடன், எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் ஹோர்மோனின் உற்பத்தி குறையும். இதன் காரணமாகவும் உறக்கம் சீரடைந்து, இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். மேலும் டிஜிட்டல் திரையினை இரவு 9 மணிக்கு மேல் அல்லது உறங்குவதற்கு மூன்று மணி நேரம் கொண்டதாக டிஜிட்டல் திரையினை காண்பதை முற்றாக தவித்துக் கொள்ள வேண்டும்.
உறக்கமின்மை பாதிப்பை உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் எம்முடைய உடலில் இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும். இதனை அலட்சியப்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு உயர்வதுடன் தூக்கமின்மை பாதிப்பும் ஏற்பட்டு, நாளடைவில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
டொக்டர் சிவபிரகாஷ்,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM