எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பயிற்சி வழங்க திட்டம் ; கயந்த கருணாதிலக்க

Published By: Priyatharshan

23 Jan, 2017 | 03:20 PM
image

ஊடக ஒழுங்கு விதி முறைமைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும். அத்துடன்  ஊடகவியலாளர்களுக்காக சர்வதேச மட்டத்தில் பயிற்சி நடவடிக்கையொன்றை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றோம் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அசிதிசி ஊடக புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பாடநெறிக்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில்  ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

எந்தவொரு தொழிலுக்கும் பயிற்சி கட்டாயமானதாகும். வைத்தியரானாலும் சட்டத்தரணியானாலும் அவர்கள் தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னர் குறிப்பிட்டகாலம் அது தொடர்பான பயிற்சியை மேற்கொள்வார்கள். அதனடிப்படையில் சிறந்ததொரு ஊடக தொழிலை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி பிரயோசனமளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்காக சர்வதேச மட்டத்தில் பயிற்சி நடவடிக்கையொன்றை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றோம். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று பாரியளவில் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு காலத்தில் ஊடக பணி தொழிலாக அன்றி சேவையாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று அது பெரும்பாலும் தொழிலாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன்  ஊடகவியலாளர்களுக்கு பாரியதொரு பொறுப்பு இருக்கின்றது. நீங்கள் பெற்றுக்கொடுக்கின்ற தகவலை இலட்சக்கணக்கானவர்கள் பார்க்கின்றனர். அதனால் நீங்கள் அறிக்கையிடும் தகவல் தொடர்பில் பொறுப்பு இருக்கவேண்டும். ஆனால் இன்று சில ஊடகவியலாளர்களின் அறிக்கையிடல்களை பார்க்கும்போது எங்களுக்கு பாரிய பிரச்சினை இருக்கின்றது. சிலர் திரிபுபடுத்தி எழுதுகின்றனர். சிலரின் அறிக்கையிடல் தொடர்பில் பொறுப்புக் கூறலில் பாரிய பிரச்சினை இருக்கின்றது. இன்னும் சிலர் மக்களுக்கு ஊண்மையான தகவலை வழங்குவதற்கு பதிலாக அதனை திரிபுபடுத்தி வழங்குகின்றனர்.

மேலும் ஊடக ஒழுங்குவிதி முறைமையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக  இன்று  பலரும் அவதானம் செலுத்திவருகின்றனர். அது தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை  சமர்ப்பித்துள்ளேன். அதற்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரும் அனுமதியளித்துள்ளனர். ஒழுக்க விதி ஆணைக்குழு அமைத்து இதற்காக மதத்தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்றுகொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அடுத்தவாரமளவில் அது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

அத்துடன் பொறுப்பு மிக்க அரசாங்கம் என்றவகையில் நாங்கள் எதனையும் பலாத்காரமாக ஏற்படுத்தமாட்டோம். ஊடகங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை முடியுமானளவு பாதுகாத்து தொடர்ந்து அதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்று மக்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டும். அதாவது ஊடகங்களில் வெளியாகும் செய்தியால் யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பாக முறையிடும் நிலையம் இருக்கவேண்டும். பத்திரிகைகளில் தவறு இடம்பெற்றால் அது தொடர்பாக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறையிடலாம். ஆனால் இலத்திரனியல் ஊடகங்களுக்கு அவ்வாறு ஒன்று இல்லாததனால் அதுதொடர்பாக ஆலோசிக்க வேண்டியிருக்கின்றது.

மேலும் நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போது எமது ஊடக சுதந்திரம் தொடர்பில் நாங்கள் மிகவும் பின்தள்ளப்பட்டே இருந்தோம். ஆய்வறிக்கையின் பிரகாரம் 185 நாடுகளில் நாங்கள் 163ஆவது இடத்திலேயே இருந்தோம். ஆனால் இப்போது 143 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். இதன் மூலம் எவ்வளவு தூரத்துக்கு நாங்கள் ஊடக சுதந்திரம் வழங்கியுள்ளோம் என்பதை தெரிந்துகொள்ளலாம். கடந்த காலத்தைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. ஊடகவியலாளர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக கேள்விப்படுவதாக இல்லை. மிகவும் சிறுசிறு  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை நாங்கள் அறிகின்றோம்.

அத்துடன்  உண்மையான தகவல்கள் வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு, தான் தொழில்புரியும் ஊடக நிறுவனங்களிலும் சுதந்திரம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த நிறுவனங்களில் இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது வேறு நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு தொழில் செய்வார் என்றால் அதுவும் ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பாகும். அதுதொடர்பாகவும் சிந்திக்கவேண்டியுள்ளது. எனவே தகவல் தொழிநுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலப்பகுதியில் மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கி மக்களை முன்னுக்குக் கொண்டுவரும்  ஊடகவியலாளர்கள் உருவாகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46