வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலபொல மாளிகையை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒப்படைக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Published By: Vishnu

06 Jun, 2023 | 04:30 PM
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலபொல மாளிகையை ஒப்படைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

கண்டி ராஜவீதியில் அமைந்துள்ள எஹெலேபொல மாளிகை, ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் எஹலேபொல மகா அதிகாரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வசிப்பிடமாக இருந்தது.

இது எஹலேபொல மாளிகை, தடுப்புச் சிறை மற்றும் சிறைக் குடியிருப்பு ஆகிய மூன்று கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

பல வீரமிக்க சிங்களவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அஹலேபொல மாளிகையை தொடர்ந்தும் விளக்கமறியல் சிறைச்சாலையாக நடத்துவது குற்றம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் (கி.பி. 1844) இது இராணுவ முகாம்களாகவும் பின்னர் சிறைச்சாலையாகவும் போகம்பர சிறைச்சாலையாகவும் இம்மாளிகை பயன்படுத்தப்பட்டது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பூஜபூமி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அஹலேபொல மாளிகையானது 2005 ஆம் ஆண்டு விஞ்ஞான கட்டிடமாக அறிவிக்கப்பட்டது.

கண்டி நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அஹலேபொல மாளிகை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டது.

அதன் பின்னர் இங்கு மீள் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2014 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியில் இருந்து 154.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு, இந்த மாளிகையை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மீள் அபிவிருத்தியை நிறைவு செய்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிடம் கையளிப்பதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57
news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30