எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் பொம்மை எனும் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இப்படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இயக்குநர் வெங்கட் பிரபு அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொம்மை'. இதில் எஸ். ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன், கே. எஸ். ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கதை, வசனத்தை எம். ஆர். பார்த்திபன் எழுத, பட தொகுப்பு பணிகளை அண்டனி கவனித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பி மருது பாண்டியன், ஜாஸ்மின் சந்தோஷ், தீபா டி துரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்டமான துணி கடைகளில் விளம்பரத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் அழகான ஆள் உயர பொம்மையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இம்மாதம் பதினாறாம் திகதியன்று 'பொம்மை' படமாளிகைகளில் வெளியாகிறது. இதற்காக பிரத்தியேக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM