வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து 648 வெற்று காஸ் சிலிண்டர்களுடன் கடத்தப்பட்ட வாகனம் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் காஸ் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் வர்த்தக நிலையப்பகுதிக்கு வந்த காஸ் விநியோக வாகனம் 648 வெற்றுக் காஸ் சிலிண்டர்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, அங்கு வந்த குறித்த பெண்ணின் மூத்த மகன் வெற்றுக் காஸ் சிலிண்டருடன் அங்கு நின்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தனது மகனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனத்தை வெற்று சிலிண்டர்களுடன் மீட்டுள்ளதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும் வாகனத்தையும் நீதிமன்றில் முற்படுத்த நெளுக்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM