புசல்லாவை, பெரட்டாசி தோட்டத்திற்கு பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரி போராட்டம்

Published By: Vishnu

05 Jun, 2023 | 08:14 PM
image

புசல்லாவை, பெரட்டாசி தோட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி திங்கட்கிழடமை (05) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.

கடந்த மே 27 ஆம் திகதி இ.போ.ச பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது. பஸ் சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன.

எனினும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது அனுமதிக்க முடியாத செயல் என போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். அத்துடன், தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

பெரட்டாசி வீதி ஊடாக பேரணியாக வந்த மக்கள், கெமுனுபுர சந்தியை வந்தடைந்த பின்னர் போராட்டத்தை முன்னெடுத்தனர். உடனடியாக இ.போ.ச பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இடித்துரைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18