அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப்பின்,  முதலாவது வெளிநாட்டு அரசத் தலைவராக பிரித்தானிய பிரதமரை உத்தியோகபூர்வமான முறையில் வெள்ளை மாளிகையில் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார். 

குறித்த விஜயத்தின் போது வெள்ளை மாளிகையில் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்பை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் பிரித்தானிய ஊடகமொன்றிற்கு தெரேசா மே வழங்கிய செவ்வியில் தனது அமெரிக்க விஜயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, 

அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒரேவகையான சவால்களையே எதிர் நோக்குகின்றன. 

பெண்கள் குறித்த டிரம்பின் கருத்துக்களில் தான் இணைக்கும் குறிப்புகளையும் விளங்கப்படுத்த தான் தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த சந்திப்பின் போது பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தங்கள், நேட்டோ படையினரின் முக்கியத்துவம் மற்றும் சிரியா விவகாரம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.