(நெவில் அன்தனி)
தென் கொரியாவின் யெச்சியொன் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் ஒரு பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
திங்கட்கிழமை (05) சில மணித்தியாலங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் காவத்தை மத்திய மகா வித்தியாலய மாணவன் மலித் யசிறு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர் முப்பாய்ச்சலில் 15.82 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இலங்கையில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் அவர் பதிவுசெய்த புதிய சாதனையுடனான 15.89 மீற்றர் தூரத்தைவிட தென் கொரியாவில் அவரது தூரப் பெறுதி சற்று குறைவாக இருந்தது.
அப் போட்டியில் 16.08 மீற்றர் தூரம் பாய்ந்த ஜப்பான் வீரர் மனாட்டோ மியாஓ தங்கப் பதக்கத்தையும் சீனாவின் மா யிங்லொங் (15.98 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இதுவரை இலங்கைக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM