கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை உடைத்து பணம், தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்வம்பம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய சந்தேக நபர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை மூன்று சந்தேக நபர்கள் உடைத்து, அங்கிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி, தங்க நகைள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீது சந்தேக நபர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதன் போதே பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.