சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீனவர்களுக்கான மண்ணெண்ணை மானிய அடிப்படையிலானது இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக மன்னார் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 2431 மீனவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் முதல் கட்டமாக மீனவர்களுக்கு 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர மீனவர்களுக்கு மன்னாரில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் V.கலிஸ்ரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனவர் ஒருவருக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக மன்னார் நகர மீனவர்களுக்கு 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM