யாழ்ப்பாணம், எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கங்கள் நேற்று  திறந்து வைக்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களே இவ்வாறு  திறந்து வைக்கப்பட்டன. 

இலங்கை கடற்படைத்தளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜயவர்த்தன, வடக்கு மாகாண கடற்படைத்தளபதி பியல் டி சில்வா, மற்றும் பௌத்த மதகுரு ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்து வைத்தனர்.

எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் கடமையாற்றினர். இதற்காக கிடைக்கப்பெற்ற கூலியிலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு, நயினாதீவுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும் 7.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இலங்கை முழுவதும் 107 இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் யாழ்.மாவட்ட த்தில் 5 இடங்களில் இந்த செயற்றிட் டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ். பொலிஸ் நிலையம் ஆகியவற்றுடன் இன்றையதினம் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வேலனை பிரதேச செயலாளர் சுகுணவதி, கடற்படைஅதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்குது.