தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள முடியும் என நிருபித்த டாங்கி மனிதன் - தினமென்சதுக்க படுகொலைகள் இடம்பெற்று 34 வருடங்கள்

Published By: Rajeeban

05 Jun, 2023 | 11:57 AM
image

------------------

எங்கள்மத்தியில்உள்ள டாங்கி மனிதர்களை அடையாளம்காணுதல்ஆதரவளித்தல்

------------------------

எனக்கு டாங்கிகளை பிடிக்காது.

34 வருடங்களிற்கு முன்னர் தினமென் சதுக்க படுகொலைகள் இடம்பெற்ற தருணத்திலிருந்து எனது மனதில் டாங்கிகள் நகரும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

1989ம் ஆண்டு சீன தலைநகரின் மையத்தில் உள்ள தினமென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த அவர்கள் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கோரினர்.

சீன தலைநகரில் மார்ஷல் சட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாள் - மே 19 1989 – கலிபோர்னியாவின் பேர்க்லே பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து விட்டு வந்த நான் மாணவர்களின் ஆர்ர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டேன்.

நான் மயிரிழையில் உயிர்தப்பியபோதிலும் டாங்கிகள் சேஞ்அன் வீதியில் மாணவர்களை துரத்திச்செல்வது உட்;பட நான் பார்த்த காட்சிகள் எனது வாழ்க்கையின் பாதையை மாற்றின.

நான் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர், தினமென் சதுக்கத்தில் இடம்பெற்றது போன்ற ஒரு சம்பவம்  மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்வதற்கு நான் பாடுபடுகின்றேன்.

ஜூன் மாதத்தின் அந்த நாளில் நான் 20 நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமான நபரால் நான் ஈர்க்கப்பட்டேன்.அவரது பெயர் என்னவென்பதை நான் அறியாத போதிலும் உலகின் ஏனையவர்கள் போல நான் அவரை டாங்கி மனிதர் என அழைக்கின்றேன்.

டாங்கி மனிதரின் மிகவும் பிரபலமான புகைப்படங்கள் ஜூன் ஐந்தாம் திகதி  படுகொலைகள் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டன.

அவர் வெள்ளை சேர்ட்டும் கறுப்பு நீண்டகாற்சட்டையும் அணிந்திருந்தார்,கைகளில் எதனையோ சுமந்தபடி காணப்பட்டார் – மிகவும் ஆபத்தான நிலையில் டாங்கிகளிற்கு முன்னாள் நின்றிருந்தார்.டாங்கிகள் என்பது சீனாவின் பலத்தின் வெளிப்பாடு.

உலகம் பார்த்துக்கொண்டிருந்தவேளை அந்த நபர் அசையாமல் டாங்கிகளின் முன்னாள் நின்றிருந்தார்.

டாங்கியை செலுத்தியவரே குழப்பமடைந்தார்.

டாங்கி வலது இடது பக்கம் நகர்ந்தது-பின்னர் நின்றது – அந்த நபரும் அப்படியே நின்றுகொண்டிருந்தார்.

யார் இந்த டாங்கி மனிதன்?

கடந்த 34 வருடங்களாக யார் இந்த டாங்கி மனிதர் என்பதை கண்டுபிடிப்பதற்கு மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்,ஆனால் அவர் யார் என்பதும் அவருக்கு என்ன நடந்தது என்பதும் மர்மமாக உள்ளது.

தினமென் சதுக்கபடுகொலைகள் குறித்த கதையாடல்களையும் உண்மையையும் மறைப்பதற்கு சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இதற்கு காரணம்.

உலக அரங்கில் சீனாவின் வலிiயும் செல்வாக்கும் வியத்தகு விதத்தில் வளர்ச்சிகண்டுள்ள அதேவேளை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் தினமென் சதுக்கத்தில் இடம்பெற்றவைகளை மறைப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

சீனாவில் பொதுமக்கள் நினைவுகூறுவது என்பது அரசாங்கத்திடமிருந்து ஈவிரக்கமற்ற எதிர்ப்பை எதிர்கொள்கின்றது.

டாங்கி மனிதனின் புகைப்படம் குறித்து சீன கம்யுனிஸ்;ட் கட்சி அச்சப்படுவது அவர் எதனை பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது.

அவர் அசைக்க முடியாதமனித உணர்வின் அடையாளமாக திகழ்கின்றார் அச்சுறுத்தும் அரசவன்முறைக்கு எதிரான தனிநபர் ஒருவரின் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றார்.

அவர் சுதந்திரம் நீதி மற்றும் மனித கௌவரத்திற்கான மனித விருப்பத்தின் உருவகம்.

அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக கொண்ட ஒரு தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள முடியும் என்பதை டாங்கி மனிதனின் செயல் நிரூபிக்கின்றது.

டாங்கி மனிதனின் வீரம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் துன்பங்களை எதிர்கொள்ளும்போது உறுதியாக இருப்பதற்கும் தாங்கள் நம்புவதற்காக போராடுவதற்குமான தூண்டுதலை வழங்குகின்றது.

டாங்கி மனிதனை நான் கடந்த 34 வருடங்களாக தேடிவருகின்ற போது  டாங்கி மனிதன் யார் என்பது முக்கியமானது என்றால் உலகம் எங்கிலும் உருவாகிவரும் டாங்கி மனிதர்களை அங்கீகரிப்பதும் ஆதரவளிப்பதும் அவசியம் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.அவர்களிற்கு ஆதரவளிக்கவேண்டும் அவர்களின் போராட்டங்களில் இணைந்துகொள்ளவேண்டும்.

உக்ரைன் ஜனாதிபதியும் உக்ரைன் மக்களும் டாங்கிமனிதனின் உணர்வை பிரதிபலிக்கின்றனர், உக்ரைனிற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் அவர்கள் எப்பாடுபட்டாவது யுத்தத்தில் வெல்வதற்கு டாங்கிகள் அவசியம் என்பது முரண்நகையான விடயம்.

ஆனால் டாங்கி மனிதனின் உணர்வே நம்பிக்கையை அளிக்கின்றது.

அவ்வாறான மற்றுமொரு டாங்கிமனிதன் - விளாடிமிர்காரா- முர்சா - ரஸ்யாவின் ஜனநாயக எதிர்கட்சி தலைவர் - வோசிஙடன்போஸ்டிற்கு எழுதுபவர்,எனது தனிப்பட்ட நண்பர்.

ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக கொள்கை அடிப்படையில் விமர்சிப்பவர்- அவர்தனது தாயகத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தினை ஊக்குவிப்பதற்கும் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

தனது தளர்ச்சியற்ற பரப்புரைக்காக அவர்இரண்டு தடவை நஞ்சூட்டப்பட்டார்,புட்டின் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததும் அவர் ரஸ்யாவிற்கு சென்றார்,2022 ஏப்பிரலில் சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் ரஸ்யாவின் படையெடுப்பை கடுமையாக விமர்சித்தார்.

அவர் எதிர்பார்த்ததை போல அவர் கைதுசெய்யப்பட்டார் - அவருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனது தேசமான சீனாவில் எண்ணற்ற டாங்கிமனிதர்கள் உள்ளனர். சீனாவின் மன்னராக ஜி ஜின்பின் முடிசூட்டப்பட்ட சீனகம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு ஆரம்பமாவதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் தலைவரின் வழிபாடு சர்வாதிகாரம் மனித உரிமைமீறல்கள்மற்றும் தணிக்கையை வலுப்படுத்துதல் என்பவற்றிற்கு எதிராக தனிநபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்தார்.

வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாகயிருக்க விரும்பும் ஜிஜின்பிங்கின் விருப்பத்தை அவரது கொவிட்கொள்கையை அவர் விமர்சித்தார்,சிட்டொங் பாலத்தில் டயர்களை எரித்து பதாகைகளை தொங்கவிட்டு அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

அவர் யார் என்பது தெரியவரவில்லை ஆனால் அவர் பாலமனிதன் என அழைக்கப்படுகின்றார்.

கடந்த நவம்பரில் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அடைப்பட்டிருந்த மக்கள் தீவிபத்தில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து சீனாவில் தினமென்சதுக்க ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னர் முதல்முறையாகஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகவேகமாக ஜனநாயகம் சுதந்திரம்ஆகியவற்றை கோரும்ஆர்ப்பாட்டங்களாக மாறின,சீனாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பால மனிதரின்  கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் சீன ஜனாதிபதி கல்விகற்ற பல்கலைகழத்திற்கும் பரவியது.

இருண்ட ஆட்சி குறித்த அச்சம் காரணமாக நாங்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றால் எங்கள் மக்கள் ஏமாற்றமடைவார்கள் இந்த பல்கலைகழக மாணவன் என்ற அடிப்படையில்நான்வாழ்நாள் முழுவதும் ஏமாற்றமடைவேன் என மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொருமனிதனிற்குள்ளும் ஒரு டாங்கி மனிதர் இருக்கி;ன்றார் என நான் நம்புகின்றேன் அதனை புரிந்துகொண்டால் நம்மில் சிறந்ததை நாங்கள்அடையாளம்கண்டுஅடையலாம்.

டாங்கிமனிதனின் உணர்வுகளுடன் சீனாவில் பலர் உள்ளனர்.

அவர்களின் துணிச்சல் இறுதியில் சர்வாதிகாரத்திற்கு எதிராக திரும்பும் என்பது குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

-

ஜியான்லி ஜாங்- தினமென் சதுக்க படுகொலைகளில் இருந்து தப்பியவர்-சீனாவின் முன்னாள் அரசியல் கைதி 

நியுஸ்வீக் 

தமிழில் ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்காளர்கள் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயங்கள் 

2024-09-20 09:48:58
news-image

பொருளாதார தலைவிதியை தீர்மானிக்கப்போகும் ‘21’ 

2024-09-18 16:58:44
news-image

தொழிற்சங்க பலவீனமா? தேர்தல் நாடகமா?

2024-09-18 17:55:39
news-image

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள்...

2024-09-18 17:59:27
news-image

சிறுபான்மையினரது உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்துவேன் -...

2024-09-18 14:28:15
news-image

இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளாத இலங்கை மிக...

2024-09-18 13:40:31
news-image

விசேட அதி­கா­ரங்­களை யாருக்கும் வழங்க முடி­யாது...

2024-09-18 13:26:18
news-image

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு...

2024-09-18 16:03:01
news-image

13இன் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய...

2024-09-18 16:02:09
news-image

ஜனாதிபதி தேர்தல் சஜித்பிரேமதாச அனுரகுமார என்ற...

2024-09-18 12:10:23
news-image

திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும்...

2024-09-18 10:39:48
news-image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு...

2024-09-17 13:58:26