ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது

05 Jun, 2023 | 09:54 AM
image

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்  (International Covenant on Civil and Political Rights) குடியியல் உரிமைகள்,அரசியல் உரிமைகள் தொடர்பிலான உலகின் தரநிலையான வழிகாட்டியாகும். அந்த ஒப்பந்தம்  அரசாங்கங்களினால் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒரு  முறையில் இலங்கையின் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 

நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய அந்த சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை அரசாங்கங்களினால் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கென்று கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற இன்னொரு துரதிர்ஷ்டவசமான உதாரணமாகும்.

வெறுப்புப்பேச்சை தடைசெய்யும் சிவில் உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகளுக்கான ஒப்பந்த சட்டத்தின் 3 (1) பிரிவின் ஏற்பாடுகளை நடாஷா மீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்றில் அவர் சிறுவனாக இருந்தபோது புத்தபிரானிடம் காணப்பட்ட ஆற்றல்களை உதாரணமாகக்கூறி தங்களை மேம்படுத்திக்கொள்வதில் சிறுவர்களிடம்  மந்தநிலை காணப்படும் இன்றைய சமூகஅந்த  சூழ்நியில்  வாழ்க்கையுடன் ஆற்றல்களை ஒப்பிட்டார்.

இவ்வுலக வாழ்க்கை தொடர்பான வாக்குவாதங்களுக்கு  மதங்களின் தாபகர்களையும் போதகர்களையும் பயன்படுத்துவது அந்த போதனைகளைப் பின்பற்றுகின்றவர்களின் மனதை புண்படுத்தி அவமதிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்த நகைச்சுவைப் பேச்சு கலைவடிவத்தை வெறுப்புப்பேச்சுக்கு ஒப்பானதாக வர்ணிப்பது   நியாயமற்றதாகும். ஒரு வாரத்துக்கும் அதிகமாக அந்த பெண் கலைஞரை தடுத்துவைத்திருப்பதும் நியாயமற்றதாகும்.

பாரபட்சம், வன்முறை அல்லது பகைமையை தூண்டுகின்ற வகையில் அமையக்கூடிய வெறுப்புணர்ச்சியை ஆதரித்துப்பேசுவதை சிவில் உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகளுக்கான ஒப்பந்தச் சட்டத்தின் 3(1) பிரிவு தடைசெய்கிறது. நடாஷாவின் விவகாரத்தில் அவரது பேச்சு வெறுப்புப்பேச்சாக இருப்பதால் சட்டவிரோதமானது என்று கூறுவதானால் சம்பந்தப்பட்ட குழுவுக்கு எதிராக பாரபட்சம் காட்டுமாறு அல்லது பகைமையை வெளிப்படுத்துமாறு அல்லது வன்முறையில் ஈடுபடுமாறு மற்றவர்களை துண்டிவிடும் நோக்கம் அவருக்கு இருந்தது என்பதை தெளிவாகக் காண்பிக்கவேண்டியது அவசியமாகும் என்ற சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த பிரமாணத்தின் அடிப்படையில் நடாஷாவின் கருத்து வெளிப்பாடு பொருந்தவில்லையானால், அது அதிர்ச்சிதருவதாக, மனதைப்புண்படுத்தவதாக அல்லது வருத்தந் தருவதாக இருந்தாலும் அது அரசினால் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் மன்னிப்புச்சபை குறிப்பிடுகிறது.

கடந்த காலத்தில் வெறுப்புப்பேச்சுக்களின் இலக்காக சிறுபான்மை இனத்தவர்களும் மதத்தவர்களும் இருந்த பல சம்பவங்களைக் கூறமுடியும்.ஆனால் அவர்களை அல்லது அவர்களின் மதிப்பை பாதுகாப்பதில் அரசாங்கங்கள் அசமந்தமாகவே இருந்துவந்திருக்கின்றன. இத்தகைய இலக்குவைப்புக்கள் அடிக்கடி இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களில் குறுகிய தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் மூலமும் ' மற்றவர்கள் ' பற்றி பீதியூட்டுவதன் மூலமும் சனத்தொகையின் பிரிவுகளை அணிதிரட்டுவதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மதக்கோட்டாடுகளின் வழியில் நடப்பதாக தங்களைக் கூறிக்கொள்கின்ற அல்லது தங்களது மதப்பற்றைப் பகிரங்கமாக தவறாமல் காட்டிக்கொள்கின்ற அரசியல் தலைவர்களும் அரசாங்க தலைவர்களும்   இலங்கைச் சமூகத்தின் பல மத, பல மத மற்றும் பன்முகத்தன்மையை கவனத்திற்கொண்டு, நம்பிக்கை,நல்லெண்ணம், நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான பன்முக உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

வெறுப்புப்பேச்சு புலத்துக்கு வெளியிலான சமூக மற்றும் அரசியல் விமர்சனங்களைச் செய்பவர்களுக்கு எதிராக குடியியல்  உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தச் சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. வெறுப்புப்பேச்சுக்கு எதிரான இந்தச் சட்டம் அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை இலக்குவைப்பதற்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான வெளியை மூடுவதற்கும் பொதுவில் ஊடக சுதந்திரத்துக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்ததையும் பயன்படுத்தப்படுவதையும் நாம் அவதானிக்கிறோம்.

நடாஷாவின் நிகழ்ச்சியை தங்களது இணையத்தளத்தில் ஔிபரப்பியமைக்காக  சமூக ஊடக்தளமான எஸ்எல் - விலொக்ஸின் உரிமையாளரின் கைது மிகவும் கவலைக்குரிய தோற்றப்பாட்டின் அறிகுறியாகும்.

சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கும் விமர்சன ரீதியாக அபிப்பிராயங்களை கூறுவதற்குமான இடப்பரப்புக்கு எதிரான நடவடிக்கை ஜனநாயக அரசியல் சமுதாயம் ஒன்றில் அதுவும் குறிப்பாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்களுக்கு பெரும் துன்பங்கள் நேர்ந்ததும் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றதுமான இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. 

அந்தப் பாதையில் செல்லவேண்டாம் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் தேசிய சமாதானப் பேரவை கைதுகள் மற்றும் அவற்றுக்கான காரணகாரிய அடிப்படைகள் தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபரைக் கேட்டதன் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செய்திருக்கும் தலையீட்டை வரவேற்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21