உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.
இந்தச் சிறுவன் பற்றிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் நுகர்ந்திருந்த நிலையில் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.
தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM