குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான சட்டம் அவசியம் - லக்ஸ்மன் கிரியல்ல

Published By: Rajeeban

05 Jun, 2023 | 06:47 AM
image

குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட தவறாக நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய சட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல

 தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளி;ன் படி கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் மாத்திரமே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இது பாரதூரமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

தவறானசெயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினரை பதவிநீக்குவதற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு அவ்வாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது ஆனால் நாங்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை உரிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினரை பதவிநீக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை அரசமைப்பில் மாற்றங்கள் ஊடாகவே மேற்கொள்ளமுடியும் என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சூழ்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து குறிப்பிட்ட கட்சியின் தலைவர்களால் மாத்திரம் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது வெற்றியளிக்கவில்லை  நாடாளுமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் அரசமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46