மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

Published By: Vishnu

04 Jun, 2023 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

ஆங்கிலேய எவ்.ஏ. கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் இல்கே குண்டோகன் போட்ட அதிவேக கோல் உட்பட 2 கோல்களின் பலனாக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை 2 - 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட மென்செஸ்டர் சிட்டி கழகம் எவ்.ஏ. கிண்ண சம்பியனானது.

மே மாதம் 20ஆம் தனது மூன்றாவது தொடர்ச்சியான பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்த மென்செஸ்டர் சிட்டி, இரண்டு வாரங்கள் கழித்து இப்போது எவ்.ஏ. கிண்ண சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்துள்ளது.

மென்செஸ்டர் கால்பந்தாட்ட ஜாம்பவான்களான இரண்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது மிகப் பெரிய (எவ்.ஏ. கிண்ணம்) இறுதிப் போட்டி இதுவாகும்.

அந்த இறுதிப் போட்டியில் குண்டோகன் 12 செக்கன்களில் முதலாவது கோலைப் போட்டு மென்செஸ்டர் சிட்டியை முன்னிலையில் இட்டார்.

ஆங்கிலேய எவ்.ஏ. கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் போட்டி ஆரம்பித்த மிகக்குறுகிய நேரத்தில் போடப்பட்ட கோலாக இந்த கோல் பதிவானது.

எவ்வாறாயினும் 33ஆவது நிமிடத்தில் புறூனோ பெர்னாண்டெஸின் பெனல்டி கோல் மூலம் மென்செஸ்டர் யுனைட்டட் கோல் நிலையை சமப்படுத்தியது.

எவ்வாறாயினும் போட்டியின் இரண்டாவது பகுதியில் 51ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணித் தலைவர் குண்டோகன் தனது 2ஆவது கோலைப் போட்டார். அதுவே வெற்றிகோலாகவும் அமைந்தது.

இந்த வருடம் 3ஆவது சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்கு மென்செஸ்டர் சிட்டிக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தெவைப்படுகிறது.

சம்பின்ஸ் லீக் சம்பியன் பட்டத்தையும் மென்செஸ்டர் சிட்டி சுவிகரித்தால், 1998/99 பருவகாலத்தில் பிறீமியர் லீக், எவ். கிண்ணம், சம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்று சம்பியன் பட்டங்களையும் வென்றெடுத்த மென்ஸ்செஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கு அடுத்ததாக மூன்று கிண்ணங்களை வென்ற 2ஆவது அணி என்ற பெருமையைப் பெறும்.

ஜுன் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இன்டர் மிலான் கழகத்துக்கு எதிரான போட்டியில் மென்செஸ்டர் சிட்டி கழகம் வெற்றிபெற்றால் முதல் தடவையாக ஐரோப்பிய கழக சம்பியனாகும்.  

'உலக நாடுகளில் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் எவ்.ஏ. கிண்ணப் போட்டியே உன்னதம் வாய்ந்தது என்பதை எல்லோரும் அறிவர். எனவே, இந்த கிண்ணத்தை வென்று இரட்டை வெற்றியைப் பூர்த்திசெய்தது மகத்தானது' என குண்டோகன் தெரிவித்தார்.

'சிறப்பான ஏதாவது ஒன்றை செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த வாய்ப்பு எங்களை விட்டு விலகிச் செல்ல அனுமதிக்க விரும்பவில்லை' எனவும் சம்பின்ஸ் லீக் போட்டியை மனதில் நிறுத்தி அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35