(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை சூரியவௌ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துப்பெடுத்தாடிய இலங்கை, முன்வரிசை வீரர்களின் நிதானம் கலந்த துடுப்பாட்ட உதவியுடன் 50 ஓவர்களில் 6 விககெட்களை இழந்து 323 ஓட்டங்களைக் குவித்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய நான்கு முன்வரிசை வீரர்களும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினர்.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 43 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரட்ன 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
ஏஞ்சலோ மெத்யூஸுக்குப் பதிலாக இரண்டாவது போட்டிக்கு அழைக்கப்பட்ட சதீர சமரவிக்ரம திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பெற்றார்.
குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.
முதலாவது போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த சரித் அசலன்க இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை மட்டும் பெற்றார்.
மத்திய வரிசையில் தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நபி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரிது அஹ்மத் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 324 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆப்கானிஸ்தான் சுற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM